ஷா ஆலம், ஆகஸ்ட் 08-
சிலாங்கூர், ஷா ஆலம், செக்சியன் 20-இலுள்ள ஓர் உணவகத்தின் கால்வாய் குழாயினுள் சுமார் 29 மலைப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு மணி 9.56 அளவில் கிடைக்கப்பெற்ற அழைப்பைத் தொடர்ந்து நிகழ்விடம் விரைந்த ஷா ஆலம் தீயணைப்பு மீட்பு படையினர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவற்றை பிடித்தனர்.
பின்னர், அந்த மலைப்பாம்புகள் அனைத்தும் பாதுகாப்பான ஓர் இடத்தில் விடப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தர் தெரிவித்தார்.