ஈப்போ , ஆகஸ்ட் 08-
பேராக், சிம்பாங் புலை -யிலுள்ள ஒரு வீட்டில், கடந்த வாரம் 4ஆம் படிவ மாணவியிடம் பாலியல் வல்லுறவு புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட 16ஆவது மாணவியிடமிருந்து, கடந்த ஜூலை 31ஆம் தேதி புகார் பெறப்பட்ட நிலையில், அதே நாளில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஷீஜி மேட் அரிஸ் தெரிவித்தார்.
அந்த இளைஞர் மீதான முதல்கட்ட தடுப்புக்காவல், கடந்த திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தடுப்புக்காவல் நாளை வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முந்தைய குற்றப்பதிவை கொண்டுள்ள அந்த இளைஞர் மீதான விசாரணை நிறைவுற்றதும், அது குறித்த அறிக்கை மேல்கட்ட நடவடிக்கைக்காக, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தாக்கல் செய்யப்படும் என அஷீஜி கூறினார்.