மலாக்கா,ஆகஸ்ட் 09-
கடந்த மாதம் அண்டை வீட்டைச் சேர்ந்த 14 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ரோஹிங்கியா ஆடவர் ஒருவர், மலாக்கா, அயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
33 வயது முகமது எனுவா சையத் ஹுசின் என்ற அந்த ரோஹிங்கியா ஆடவர், கடந்த ஜுலை 21 ஆம் தேதி ஜாசின் மாவட்டம், மெர்லிமாவ்-வில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.