பாலத்திலிருந்து குதித்து ஆடவர் உயிரிழந்தார்

கோலா தெரெங்கானு , ஆகஸ்ட் 09-

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், போலீஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பாலத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோலத் திரெங்கானு, கெமாமன், கிஜல், கம்போங் புஜல் பயோஹ்என்ற இடத்தில் நிகழ்ந்தது.

பாலத்தின் மீது சந்தேகத்திற்கு இடமாக காணப்பட்ட அந்த ஆடவரை போலீசார் சூழ்ந்து கொண்ட நிலையில் 23 வயதுடைய அந்த நபர், 12 மீட்டர் உயரத்தில் உள்ள அந்த பாலத்திலிருந்து கீழே குதித்ததாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS