வளரியை வைத்திருந்ததாக காதல் ஜோடி மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-

கோலாலம்பூர், தேச மெலாதி- யில் KLFA கால்பந்து விளையாட்டுப் போட்டியின் போது தன் வசம் கெரம்பிட் எனும் வளரி கத்தியை வைத்திருந்ததாக கூறப்படும் கால்பந்தாட்ட வீரர் ஒருவர், தனது காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

உள்ளூர் ஆடவரான அந்த கால்பந்தாட்ட வீரரும், அவரின் 21 வயது காதலியான அந்நிய நாட்டுப்பெண்ணும் நேற்று மாலை 6.30 மணியளவில் கிள்ளானில் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக வங்சா மஜுமாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

எந்தவொரு சூழலிலும் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக அந்த வளரி ஆயுதத்தை கால்பந்தாட்டத்தின் போது தன் வசம் வைத்திருந்ததாக 22 வயதுடைய அந்த ஆடவர் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக ஏசிபி முகமது லாசிம் குறிப்பிட்டார்.

கால்பந்தாட்டத்தில் ஓர் அணியை பிரதிநிதித்து ஆடிய அந்த நபர், கருத்துவேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்ட போது அவர், அந்த வளரி ஆயுதத்தை கையில் ஏந்தியிருந்ததை தகவல் சாதனங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.

அந்த நபரின் காதலி, முறையான பயணப் பத்திரத்தை கொண்டு இருக்காததால், அவர் குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படவிருப்பதாக ஏசிபி முகமது லாசிம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS