9ஆம் வகுப்பில் ஃபெயிலான சிறுமி சுட்டுக்கொலை! சொந்த அண்ணனே செய்த அட்டூழியம்!!

ஆகஸ்ட் 12

தனது சகோதரி பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்த சகோதரர் கட்டுக்கடங்காத கோபத்தில் சிறுமியைச் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தானில் ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால், சொந்த அண்ணனே தனது சகோதரியைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, தனது சகோதரி பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை அறிந்த சகோதரர் கட்டுக்கடங்காத கோபத்தில் சிறுமியைச் சுட்டுக் கொன்றதாக முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் காப்பாற்ற முயன்றபோதும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை.

சிறுமியின் சொந்த வீட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சொந்த சகோதரியையே கொடூரமாக் கொன்றுவிட்டு, தப்பி ஓடிய சகோதரர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS