போலீஸ்  தோற்றத்திற்கு  களங்கம் ஏற்படலாம் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 09-

செய்தி  தொடர்பில்  விசாரணைக்கு  அழைக்கப்பட்டுள்ள மலேசியா கினி-யின்  மூன்று  நிருபர்களுக்கு  எதிராக  செய்யப்பட்டுள்ள  புகாரினால் போலீஸ் துரையின்  நற்பெயருக்கு  களங்கம் ஏற்படலாம்  என்று மூத்த பத்திரிக்கையாளர்  ஒருவர்  கருத்து தெரிவித்தார்.

அரச மலேசிய  போலீஸ் படையில் உயர் பதவி வகித்து வரும் அதிகாரிகள்  சிலர் ,பணியிடம் மாற்றப்படலாம்  என்றும் , மிகப்பெரிய சீரமைப்பு  நடைபெறலாம் என்றும் ,மலேசிய கினி செய்தி  வெளியிட்டு இருந்தது.

இதன் தொடர்பில் அந்த செய்தி தள நிறுவனத்தின்  மூன்று நிருபர்கள் ,போலீஸ் விசாரணைக்கு  ஆளாகி வருகின்றனர் .

ஆருடன் தன்மையில் செய்தி  வெளியிடுவது  மிகப்பெரிய  குற்றமா ? என்று நாட்டில்  நனிசிறந்த  விருதைப்பெற்றவரான  மூத்தப்பத்திரிக்கையாளர்  ஜோஹன் ஜாபர் வினவியுள்ளார் .

தங்கள்  செய்தியில் ஆருடத்தன்மையில்  செய்தி  வெளியிடுவது  என்பது  பத்திரிகைத்துறையில்  நீண்ட  காலமாக  கடைப்பிடிக்கப்பட்டு  வருகின்ற  நடைமுறையாகும் 

அமைச்சரவையில்  ஏற்படக்  கூடிய  மாற்றம் குறித்து தகவல் சாதனங்கள்  பல முறை  ஆருடத்தன்மையில் செய்தி  வெளியிட்டுள்ளன . ஆனால், அந்த செய்தி  எவ்வாறு  கிடைத்தது  என்பது  குறித்து  இதுவரையில்  கேள்வி  எழுதப்படவில்லை .போலீஸ் துறை மட்டும் கேள்வி எழுப்புவது  ஏன்  என்று  ஜோஹன் ஜாபர் வினவினார்  

WATCH OUR LATEST NEWS