தேசியக் கொடியை தலைக்கீழாக பறக்கவிட்ட முதியவர் கைது

பேராக்,ஆகஸ்ட் 12-

பேராக், கோலா காங்சார் மாவட்டத்திலுள்ள கட்டடம் ஒன்றில், தேசியக் கொடியை தலைக்கீழாக பறக்கவிட்டது தொடர்பான விசாரனைக்கு உதவும் பொருட்டு, 60 வயதுமதிக்க முதியவரை போலீஸ் கைது செய்துள்ளது.

நேற்று மாலை மணி 3.20 அளவில், கோலா காங்சார் போலீஸ் தலைமையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில், பேஸ்புக்கில் பரவலாகியிருந்த அவ்விவகாரம் கண்டறியப்பட்டதை அடுத்து, அது குறித்து புகாரளிக்கப்பட்டது.

அதன் பின்னர், அம்முதியவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக கூறியுள்ள கோலா காங்சார் மாவட்ட போலீஸ், சுதந்திர மாத காலத்தில், தேசிய கொடியை பறக்க செய்வதில், அனைத்து தரப்பும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS