மலாக்கா,ஆகஸ்ட் 12-
மலாக்கா, அலோர் கஜா-வில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை மணி 8 வரைக்குமான நிலவரத்தின்படி, 360 பேராக அதிகரித்துள்ளது.
அவர்கள் அனைவரும் அம்மாவட்டத்திலுள்ள 6 துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக, மலாக்கா இயற்கை பேரிடர் மேலாண்மை செயற்குழு செயலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சுமார் 21 பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துயர்துடைப்பு மையங்கள் தீவிரமாக செயல்பட்டுவருவதாக, அச்செயலகம் கூறியுள்ளது.