ஜார்ஜ் டவுன் ,ஆகஸ்ட் 12-
சாலையை பந்தயக் களமாக பயன்படுத்தி வரும் சாலை கேடிகளுக்கு எதிராக பினாங்கு போலீசார் நேற்று நள்ளிரவு வரை பட்டர்வொர்த் புறநகர் வட்ட சாலையான லெபுஹராய லுார் பட்டர்வொர்த் – மில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 67 மோட்டார் சைக்கிள்களை போலீசார் சோதனையிட்டனர். 1987 ஆம் ஆண்டு சாலைபோக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு பல்வேறு குற்றங்களுக்காக 195 சம்மன்கள் வெளியிட்டப்பட்டன. வாகனமோட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.