காதலியை கொன்றதாக 14 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு

தவாவ்,ஆகஸ்ட் 13-

13 வயதுடைய தனது காதலியை கொன்றதாக பதின்ம வயது இளைஞர் ஒருவர் Tawau உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த 14 வயது இளைஞர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மதியம், தவாவ், ஜாலான் கலபகன்- னில் எந்தவொரு அடையாள ஆவணமின்றி இருந்த 13 வயது தனது காதலியை கொலை செய்ததாக அந்த இளைஞர் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றயில் சட்டம் 302 பிரிவின் அந்த பதின்ம வயதுடைய இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS