13 இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

தவாவ், ஆகஸ்ட் 13-

சபா, லஹத் டத்து தொழில்பயிற்சி கல்லூரியில் சக மாணவன் ஒருவனை கொன்றதாக பதின்ம வயதுடைய 13 இளைஞர்கள், Tawau உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

16 க்கும் 19 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 13 இளைஞர்களும் உயர்நீதிமன்ற நீதிபதி டங்கன் சிகாடோல் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி அந்த தொழிற்பயிற்சி கல்லூரியின் 7 ஆவது தங்கும் விடுதியில் அஜிசத் முகமது நருல் அஸ்வான் என்ற 17 வயது மாணவனை கொன்றதாக அந்த 13 பேர் மீதும் கொலை குற்றச்சசாட்டு சமத்தப்பட்டுள்ளது.

மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த 13 பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS