தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், 8வது சீசனில் இருந்து விலகிய நிலையில், அடுத்த தொகுப்பாளர் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் விலகியதும் அவர் இடத்தை பிடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கமலுக்கு பதிலாக இதுவரை இரண்டு நபர்கள் மட்டுமே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதில் ஒருவர் சிம்பு, அவர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சி ஒரே சீசனோடு நிறுத்தப்பட்டது. சிம்பு தொகுத்து வழங்கிய விதமும் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் அவரும் தற்போது ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் நோ சொல்லிவிட்டாராம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் போது நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு வாரம் மட்டும் கலந்துகொள்ள முடியாமல் போனது. இதனால் அந்த ஒரு வாரம் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக கலந்துகொண்டார். அவர் ஒரு எபிசோடு மட்டுமே தொகுத்து வழங்கினார். இருந்தாலும் அந்த எபிசோடுக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் அவரை இந்த சீசனுக்கு அழைக்கவில்லை.

இவர்கள் தவிர்த்து முதலில் இருந்தே அதிகம் அடிபட்ட பெயர் என்றால் அது விஜய் சேதுபதி தான். அவர் அல்லது நயன்தாரா தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக விஜய் சேதுபதியை தான் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட் ஆகி இருக்கிறாராம். அவரை வைத்து விரைவில் புரோமோ ஷூட்டும் நடைபெற உள்ளதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
