பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
ரயிலினால் மோதப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவரின் சிதைந்த உடல், ரயில் இருப்புப்பாதையில் கண்டு பிடிக்கப்பட்டது.
ஜோகூர்பாரு ,ஜாலான் சுகா ரியா அருகில் ரயில் இருப்புப்பாதையில் உருகுலைந்த மனிதரின் உடல் அவயங்கள், ஆங்காங்கு சிதறிக் கிடந்ததாக ஜோகூர் பாரு செளடன் மாவட்ட போலீஸ் தலைவர் ரவுப் செலமட் தெரிவித்தார்.
நேற்று பிற்பகலில் சிதறிக்கிடந்த மனித உடல் அவயங்களை கண்டு பொது மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தாக அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த நபருக்கு 30 முதல் 40 வயது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. . அந்நபரின் முதுகில் டிரகன் வடிவில் பச்சைக்குத்து அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் குற்றச்செயல்கள் நிகழ்ந்தற்கான எந்தவொரு அறிகுறியும் காணப்படவில்லை. சவப்பரிசோதனைக்கான அந்நபரின் சிதைந்த உடல்பாகங்கள் ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்