புத்ராஜெயா,ஆகஸ்ட் 14-
மலேசிய சோஷலிச கட்சியான PSM- மினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப்பேரணியில் அக்கட்சியின் உறுப்பினரின் மனைவி கலந்து கொள்ளவில்லை என்ற போதிலும் அவர் போலீஸ் விசாணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் S. அருட்செல்வன் தெரிவித்தார்.

PSM கட்சியின் உறுப்பினர் விஜயகாந்தி இராமசாமியின் துணைவியார் எஸ். ராஜேஸ்வரி, இன்று மாலையில் புத்ராஜெயாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் ஆஜரானதாக அருட்செல்வன் குறிப்பிட்டார்.
இவ்விசாரணையின் போது, PSM வழக்கறிஞர் சஷிதேவன் ஆஜராகினார். அதேவேளையில் ராஜேஸ்வரின் கணவர் விஜயகாந்தியின் கைப்பேசி பறிக்கப்பட்டதாக அருட்செல்வன் தெரிவித்தார்.
