கோலாலம்பூர், ஆகஸ்ட் 14-
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பந்தர்- ஆக டத்தோஸ்ரீ பாதுகா டாக்டர் மைமுனா முகமட் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா.வின் மனித குடியேற்றத்திட்டத்தின் நிர்வாக இயக்குநராக பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டவரான முதலாவது ஆசியப் பெண்மணி டாக்டர் மைமுனா , மாநகர் மன்ற டத்தோ பண்டார் கமருல்ஜமான் மாட் சாலே- விற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
63 வயது டாக்டர் மைமுனா நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான டாக்டர் மைமுனா, இங்கிலாந்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நகர திட்டமிடல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆவார்.
டாக்டர் மைமுனா, பதவி காலம், நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.