குவா முசாங், ஆகஸ்ட் 14-
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கேரி சட்டமன்றத் தேர்தலில் ஒராங் அஸ்லி வாக்காளர்களை கவர்வதற்காக அவர்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிளந்தான் மாநில பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு வன்மையாக மறுத்துள்ளது.
அது அடிப்படை குற்றச்சாட்டு என்றும், இந்த குற்றச்சாட்டை எதிர்த்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் முகமது கமல் முகமது தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் இப்படியொரு தவறான பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.