இப்பதான குழந்தை பிறந்துச்சு.. அதற்குள் 2 விசேஷமா? லிப்கிஸ் கொடுத்து அமலாபால் கொண்டாட்டம்..!

ஆகஸ்ட் 15-

நடிகை அமலா பாலுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் இன்று அவர் இரட்டை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா பால் என்பதும் அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட அமலா பால், சமீபத்தில் குழந்தை பெற்றார் என்பதும் அந்த குழந்தை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது முதலாவது திருமண நாள் என்றும் அதே நேரத்தில் தனது குழந்தையின் இரண்டு மாத கொண்டாட்டம் என்றும் இந்த இரண்டு கொண்டாட்டங்களையும் நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் தனது கணவருக்கு லிப்கிஸ் கொடுத்து இந்த இரட்டை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அமலா பால் புகைப்படமாக வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

WATCH OUR LATEST NEWS