ஈப்போ , ஆகஸ்ட் 15-
தனது மகளை பள்ளியில் விடுவதற்காக மாது ஒருவர் பயணித்த கார், எதிரே வந்த MPV வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும், மகளும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் கோலகங்சார், ஜாலான் குவாலா கங்சார் – மனோங் சாலையில் நிகழ்ந்தது.
அந்த மாதுவின் Honda City காரில் பயணித்த அவரின் மகள் என்று நம்பப்படும் சிறுமி ஒருவர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபோரோசி நோர் அகமது தெரிவித்தார்.
அந்த Handa City வாகனம், MPV Toyota Vellfire வாகனத்துடன் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஹோண்டா சிட்டி காரில் பயணித்த மாதுவும், அவரின் மகளும் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
காயமுற்ற அந்த மாதுவின் மற்றொரு மகள், அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.