போர் செல்லும் வீரன், ஒரு தாய் மகன் தான்.. ‘அமரன்’ டிரைலர் ரிலீஸ்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உருவான ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சற்று முன் வெளியான இந்த படத்தின் டிரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள், தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெறும் போர் காட்சிகள், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட காட்சிகள் உருக்கமாக இருப்பதை அடுத்து இந்த படத்தின் டிரைலர் முதல் முறை பார்க்கும் போதே ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube player

WATCH OUR LATEST NEWS