கோம்பாக்,ஆகஸ்ட் 18
8 வயது பிள்ளையைத் துன்புறுத்தி கொலை செய்தது தொடர்பாக, முறையே 29 மற்றும் 28 வயதான கணவன் மனைவியைப் போலிஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
சிலாங்கூர், ராவாங், , பந்தர் தாசிக் புடேரி-ச் பங்கிசபுரி சண்டாளவுட் கோர்ட் அடுக்ககக் குடியிருப்பில், அவர்களின் பிள்ளை உயிரிழந்ததை சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவ்விருவரும் நேற்று இரவு 9 மணியளவில் அதே வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் அந்த கணவர் அச்சிறுமியின் மாற்றான் தந்தை என்பதும் அந்த பெண் சொந்த தாய் என்பதும் தொடக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான அந்த தம்பதியர் இன்று தொடங்கி 7 நாள்களுக்கு விசாரணைக்காகத் தடுப்புக்காவலிடப்பட்டிருப்பதாக கொம்பாக் போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் நூர் அரிஃபின் முகமது நசீர் தெரிவித்துள்ளார்.