சண்டகன்,ஆகஸ்ட் 18
சபா, சண்டகன், போலிஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 42 வயது ஆடவர் உணவு விநியோகம் செய்வது போல் வேடமிட்டு கெத்தும் நீரையும் போதைப்பொருள் கலக்கப்பட்டிருந்த VAPE பானத்தையும் விநியோகித்து வந்த செயல் அம்பலமானது.
கடந்த வெள்ளிக்கிழமை, நண்பகல் 12 மணிக்கு, உதார சாலை, Taman Tai Fai Yen-னில் உள்ள தனது வீட்டில் அந்த ஆடவர் கெத்தும் நீரை பதப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டதை சண்டகன் போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் கே ராமசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பந்தப்பட்ட வீட்டில், 88 புட்டியில் 6 ஆயிரத்து 760 ரிங்கிட் மதிப்புள்ள 225.32 லீட்டரிலும், 6 நெகிழி பொட்டலத்தில் 2 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 7.85 கிலோமிராம் எடையிலும் கெத்தும் நீர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
அதோடு, 16 ஆயிரத்து 470 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கலக்கப்பட்டிருந்த பல்வேறு வகையிலான VAPE பானங்களும் அச்சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான அந்நபர் இரண்டு ஆண்டுகளாக அந்நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்ததும்; அவர்மீது 5 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.