கோலா தெரெங்கானு ,ஆகஸ்ட் 20-
தெரெங்கனு, கம்பொங் பத்து என்னம் அருகே உள்ள வீடொன்றில், உணவகப் பணியாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இரவு உணவு சாப்பிட நேற்று இரவு 8 மணிக்கு உறவுக்காரர் ஒருவர் வீட்டிற்கு வந்த சமயத்தில், 47 வயதான ஹனபி அபு பக்கர் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.
முதல்கட்ட பரிசோதனையில் அந்த ஆடவர் உயிரிழந்து ஓரிரு நாள்கள் கடந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த ஆடவரின் மரணத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படாததால், அவரின் மரணம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக கோலா தெரெங்கானு போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் அஸ்லி முகமது நூர் தெரிவித்துள்ளார்.