அலோர் கஜா , ஆகஸ்ட் 20-
சமிஞ்சை விளக்கு இருந்த சாலை ஒன்றில் விபத்தில் சிக்கி, பின் அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டருக்குத் தப்பியோடிய இருவரைப் போலிஸ் வலைத்து பிடித்து கைது செய்துள்ளது.
கைதான இருவர் பயணித்த Toyota Vios ரக வாகனத்தை மோட்டார் சைக்கிள் ரோந்து பணியாளர்கள் துரத்தும் வழியில், மலாக்கா,அலோர் கஜா, பெங்காலன் சாலையில் காலை 9 மணிக்கு அவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ரோந்து பனியாளர்கள் வருவதைக் கண்டு வேகமாக ஓட்டப்பட்ட வாகனம் பின், Nissan Navara ரக வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால், கைது செய்யப்பட்டு முறையே 45 மற்றும் 20 வயதாகிய இருவரும் காயம் ஏற்பட்டதால் அலோர் கஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாவட்ட போலிஸ் தலைவர்கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா தெரிவித்துள்ளார்.
மற்றொரு 34 வயது வாகனமோட்டி காயங்களின்றி உயிர் தப்பினார்.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.