செய்தது தவறு என ஆர்எஸ்என் ரேயர் சாடல்

கோலாலம்பூர் , ஆகஸ்ட் 20-

முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் யாசின்-னின் உரையின் காணொலிப் பதிவை எடிட் செய்ததாக கூறி, பிகேஆர் அதிகாரபூர்வ ஊடகமான சுவாரா கெடிலன் மீது குற்றம் சுமத்திய பெர்சத்து இளைஞர் பிரிவு, வான் அஹ்மத் ஃபைஹ்சல் வான் அஹ்மத் கமால் செயலை ஜெலூடாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்எஸ்என் ரேயர் சாடியுள்ளார்.

அதோடு, மற்றவர்களைச் சாடுவதை விட்டுவிட்டு முதலில், தாம் செயல் தவறானதை என்பதை புரிந்து நடந்துக் கொள்ளும்படியும் அவர் கூறினார்.

அதேவேளை, முகிடினின் பொறுப்பற்ற செயல் முன்னாள் மாமன்னர் உட்பட பல தரப்பினருக்கு மன வருத்ததை ஏற்படுத்தியிருப்பதையும் ஆர்எஸ்என் ரேயர் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி, வான் அஹ்மத் ஃபைஹ்சல், பிகேஆர் எதிர்த்து செய்துள்ள புகார் உண்மையில்லை என்றும் அவ்விவகாரத்தில் நீதிமன்றத்தில் தற்காத்து வாதாட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS