கோலாலம்பூர் , ஆகஸ்ட் 20-
2024 கூட்டரசு பிரதேச அளவிலான ருக்கூன் நெகாரா சுவரோவியம் வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பாராட்டுகளைத் தெரிவித்து பரிசுகளை வழங்கியுள்ளார்.
ருக்கூன் நெகாரா கோட்பாடுகளை மனதில் பதிய வைக்கவும் நாட்டின் மீது விசுவாசத்தை வலுப்பெற செய்யவும் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவது அவசியம் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
சமூக ஒற்றுமைக்கு ஒரு பாலமாக இயங்கி வரும் மலேசிய தேசிய காப்பகம் இதுபோன்ற போட்டிகளை நடத்தி வருவது பாராட்டக்கூடிய ஒன்று என்றார் அவர்.
புத்ரா ஜெயா கூட்டரசு பிரதேசம், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளது பெருமைக்குரியது என்று சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
ஒற்றுமையின் அடித்தளமாக விளங்கும் ருக்கூன் நெகாராவை 1970-ஆம் ஆண்டில் அப்போதைய பேரரசர் துவாங்கு இஸ்மாயில் நசிருடின் ஷா தொடக்கி வைத்தார்.