அலோர் செட்டார் , ஆகஸ்ட் 20-
கடற்கரை ஓரம், இன்று நண்பகல் 12 மணிக்கு பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்ட 2 வயது சிறுவனின் சடலத்திற்கும்; கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு குழந்தைகளின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் போலிஸ் சந்தேகித்துள்ளது.
இன்று, குலா கெடா, பாண்டாய் லெமன்-னில் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுவனின் உடலின் கழுத்துப் பகுதியில் இருந்த வெட்டு காயங்கள் முந்தைய இரண்டு குழந்தைகளின் சடலங்களில் காணப்பட்ட காயங்களைப் போலவே இருப்பதாக கெடா துணை போலிஸ் தலைவர் டெபுடி கோமிஷனர் அட்ஜ்லி அபு ஷா கூறினார்.
அதேவேளை, அது குறித்து விசாரணையை போலிஸ் மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் அதுகுறித்த ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.