வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 12-ஆம் தேதி

சுக்கை , ஆகஸ்ட் 20 –

5 வயது 8 மாதம் நிரம்பிய மகளை சித்ரவதைப்படுத்தியது தொடர்பான வழக்கின் மறுசெவிமடுப்பை செப்டம்பர்12-ஆம் தேதிக்குதெரெங்கானு, கெமாமன், சேசியேன் நீதிமன்றத்தில் ஒத்துவைத்துள்ளது.

தற்போது பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றம் சுமத்தப்பட்ட 26 வயது நோருல்ஹுதா சோபியா மூடா -வின் மனநலப் பரிசோதனை அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், நீதிமன்றம் அம்முடிவை எடுத்துள்ளது.

மகளை அடித்துக் காயப்படுத்தி சித்ரவதைப்படுத்தியது மட்டுமின்றி, ஜன்னலுக்கு வெளியே அவரைத் தூக்கியெறிந்ததாக அந்த தாயின் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS