ஈப்போ , ஆகஸ்ட் 20-
ஒரு பெண்ணும் அவரது மகளும் இருந்த வீட்டில், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுப்பட்ட மூவரைப் போலிஸ் தீவிரமாகத் தேடி வருகின்றது.
பேராக், தஞ்சோங் மாலிம், தாமன் பெர்னாம் பாரு-வில் உள்ள வீடொன்றில் கொள்ளையடித்த பின் அம்மூவரும் தப்பிச் சென்ற Proton X50 ரக வாகனத்தை ஊலு சிலாங்கூரிலுள்ள செம்பனைத் தோட்ட ஒன்றில் கண்டுப்பிடித்துவிட்டதை முஅலிம் போலிஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மோஹட் ஹனி மோஹட் நசீர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அல்லது தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலிஸிடம் தெரிவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.