சனிக்கிழமை வரை தடுப்புக்காவலிட உத்தரவு

ஷா ஆலம் , ஆகஸ்ட் 20-

15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலி முன்னாள் கூட்டாளர் விவரங்களைக் கையாண்டது தொடர்பில், அராசங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரியை சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

40 வயதுக்குட்பட்ட அந்த ஆடவரை ஐந்து நாள்களுக்கு அதாவது வரும் சனிக்கிழமை வரை விசாரணைக்காக தடுப்புக்காவலிட மஜிஸ்ட்ரெட் முகமது ரெட்சா அசார் ரெசாலி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2022 முதல் 2023 ஆண்டு வரை, அந்த ஆடவர் அக்குற்றத்தைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து விலைப்பட்டியல், பண செலுத்தும் இரசீது போன்ற ஆவணங்களையும் சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியுள்ளது.

WATCH OUR LATEST NEWS