பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்

கூலிம் , ஆகஸ்ட் 20-

பிள்ளைகள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதை ஒவ்வொரு பெற்றோர்களும் கட்டாயம் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அது இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் முக்கிய பங்களிக்கும் என்றும் கெடா மாநில அரசாங்கத்தின் மேலாண்மை பிரிவின் துணை மாநில அரசு செயலாளர் டத்தோ டாக்டர் நாட்ஸ்மான் பின் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியர்களில் சிலர் குடும்ப சூழ்நிலையினால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு பதிவுச் செய்யாமல் வீட்டியிலே வைத்திருப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பிள்ளைகள் கல்வி கற்பத்தற்காக அனைத்து விதமான உதவிகளைச் செய்வதற்கு அரசாங்கம் பல வழிகளை வகுத்துள்ளது.

அந்த வகையில், அந்த உதவிகளைப் பெற்று பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவத்தற்கு முன்வர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் என்பதையும் டத்தோ டாக்டர் நாட்ஸ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று பாடாங் செராய் வட்டாரத்தில் அமைந்துள்ள ஹென்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கூலிம் மாவட்ட சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ” மாணவர்களே ஊழலைத் தடுப்போம் ! விழிப்புணர்வோடு செயல்படுவோம் ” எனும் ஊழல் தடுப்பு இலாகாவின் விழிப்புணர்வு நிகழ்விற்கு சிறப்பு வருகைத்தந்த போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS