கோலாலம்பூர் , ஆகஸ்ட் 20-
குத்தகை அடிப்படையில் பணிப் புரியும் அரச ஊழியர்களின் சேம நிதியை, சேம நிதி வாரியம் துல்லியமாக ஆய்வுசெய்யும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
வருட தொடக்கத்தில், குத்தகை அடிப்படையில் புதிதாக பணியில் அமரும் அனைத்து பொது சேவை ஊழியர்களை சேம நிதி திட்டத்தில் இணைக்கும் முயற்சியைப் பற்றி அறிவித்திருந்தபோது, அது தொடர்பான பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு இவ்வாண்டு இறுதியில் முழுமையான தகவல்களுடன் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.