நாட்டின் நுழைவாயில்களில் மோசடி- SPRM சோதனையில் அம்பலம்

ஷா ஆலம் , ஆகஸ்ட் 21-

சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களை KLIA2 நுழைவாயில் வழியாக மலேசியாவிற்கு அழைத்து வந்த மோசடி நடவடிக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட சோதனையில் அம்பலமாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட இடத்தில் பணியாற்றும் சில பொறுப்பற்ற தரப்பினர்கள் ‘counter setting’ மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றாமல், வெளிநாட்டினர்களை முறையான ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதித்திருப்பது அச்சோதனையில் தெரிய வந்துள்ளது.

அது தொடர்பாக, நேற்று, கிளாந்தான், பினாங்கு மற்றும் கிள்ளானில் மேற்கொண்ட ‘Op Pump’ சோதனையில், 20-இல் இருந்து 50 வயதுக்குட்பட்ட 9 ஆடவர்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டதை SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS