கிளந்தான் , ஆகஸ்ட் 20-
கிளந்தான் மாநிலத்தில் நெங்கிரி, சட்டமன்ற தொகுதிற்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஆட்சியாளர்கள் மன்றம் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அதே சமயம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு பேசிய முகிடின் மீது, நாடு தழுவிய நிலையில் 29 புகார்களை போலீசார் பெற்ற நிலையில், நாளை முகிடின் போலீஸ் நடத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவார் என பெர்சத்து கட்சியின் பொது செயலாளறும் எதிர்க்கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறியுள்ளார்.
நாட்டின் 10வது பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில், அச்சமயத்தில் மாமன்னராக இருந்த பகாங் சுல்தான் மீது அவதூறு பரப்பும் நிலையில் முகிடினின் பிரச்சாரம் இருந்ததால், தேங்கு மகோடா பகாங்-ங்கின் அந்தரங்க செயலாளர் அமீர் சியாபிக் ஹம்சா நேற்று போலீசில் புகார் அளித்தார்.
அதே சமயத்தில், நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக பேசிய முன்னாள் பிரதமரும் மூத்த அரசியவாதியுமான முகிடின் யாசின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பகாங் மந்திரி பெசார் , போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.