புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 21-

2024-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்காக வாக்காளர்கள் பததிவேடு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவலை மலேசிய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த பதிவேட்டில் தங்களின் சுயவிவரங்களை ஆகஸ்ட் 21 அதாவது இன்று தொடங்கி செப்டம்பர் 19-ஆம் தேக்குள் சரிபார்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலைக்கான அந்த புதிய பதிவேட்டில், ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதிக்குள் சுயமாக பதிந்த 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மொத்தம் 38 ஆயிரம் 952 பேர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த பதிவேடு குறித்த முழுமையான தகவல்களை மக்கள் SPR-இன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வழி தெரிந்து கொள்ளலாம் என்று மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

WATCH OUR LATEST NEWS