கோலாலம்பூர், ஆகஸ்ட் 21-
மன்னர் ஆட்சியை அவமதித்து பேசியதாகக் கூறப்படும் வுவகாரம் தொடர்பாக பேரிக்காதான் நசியனால் ஸ்ரீ முகைதீன் யாசின் போலிஸ் தரப்பிடம் பல ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தாம் முன்னாள் பேரரசரின் ஆட்சியை அவதூறாக பேசியது தொடரபான போலிஸ் விசாரணைக்கு உதவவே சில ஆவணங்களை சமர்ப்பித்ததை முகைதீன் உறுதிப்படுத்தினார்.
2022-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி மக்களவை சபாநாயகரிடமிருந்து பெறப்பட்ட இரண்டு பக்கக் கடிதத்தையும் தாம் போலிஸிடம் சமர்ப்பித்தாகவும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
நான் பிரதமராக நியமிக்கப்படுவேன் என்று நம்பி மக்களவையின் உறுப்பினர்களின் மொத்தம் 114 சட்டப்பூர்வ பிரகடனங்கள் 21-ஆம் தேதி நவம்பர் 2022-ஆம் ஆண்டு Istana Negara-வில் சமர்ப்பிக்கப்பட்டதையும் அதற்கு அடுத்த நாள் அதாவது 22-ஆம் தேதி மற்றொரு சட்டப்பூர்வமான பிரகடனம் மற்ற தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டதையும் முகிடின் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, 3R விவகாரம் தொடர்பாக, இன்று காலை கோலாலம்பூரில் உள்ள மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தில் முகிடின் வாக்குமூலத்தை போலிஸ் ஒரு மணி நேரம் பதிவு செய்தனர்.