அந்நியநாட்டைச் சேர்ந்த பிரஜைகளுக்கு அதிகாரிகளின் முறையான சோதனைக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த கும்பலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி முறியடித்துள்ளது

கிள்ளான் , ஆகஸ்ட் 21-


கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு மற்றும் கிளந்தானில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் பம்ப்‘ சோதனை நடவடிக்கையின் வாயிலாக 20 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 12 பேரைக் கைது செய்ததன் வழி இக்கும்பலின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி தலைமை. ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.


கைது செய்யப்பட்டவர்களில் நான்கு நிறுவன உரிமையாளர்கள், வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பொது மக்கள் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பணிபுரிந்து வரும் ஐந்து அமலாக்க அதிகாரிகளும் அடங்குவர் என அவர் தெரிவித்தார்.


இந்த சட்டவிரோத நடவடிக்கையின் வாயிலாக அக்கும்பல் பெரும் தொகையை லாபமாக ஈட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. கடந்த 2022 முதல் 20214 வரையிலான காலக்கட்டத்தில் 40 லட்சம் வெள்ளி மதிப்பில் பணப்புழக்கம் நடைபெற்றுள்ளதாகவும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்காக இப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரு பகுதி அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்!.

WATCH OUR LATEST NEWS