ஷா ஆலம், ஆகஸ்ட் 21
கோலா லங்காட், ஜாலான் சிம்பாங் மோரிப் கம்போங் கெலானாங்கில் சிலாங்கூர் SUK பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர், மேலும் 15 பேர் லேசான காயமடைந்தனர்.
மதியம் 1.07 மணிக்கு விபத்து குறித்துஅழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர் வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் 2 மீட்டர் ஆழத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பேருந்தில் 15 பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் என மொத்தம் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!