மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள மூன்று இந்திய நிறுவனங்கள்

புதுடில்லி , ஆகஸ்ட் 21-

மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள மூன்று இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புது டில்லியில் தனித்தனியாக இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். பின்னர் சுமார் 40 தொழில் அதிபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இமாமி அக்ரோடெக் லிமிடெட், எச்சிஎல் டெக் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ( உடனான சந்திப்புகளில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் மற்றும் முதலீடு, வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் ஆகியோரும் பிரதமருடன் கலந்து கொண்டனர்.


மேலும், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை ஒரு திட்டமிடப்படாத சந்திப்பில் அன்வார் சந்தித்தார். அது உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லை என்ற போதிலும் மரியாதை நிமித்தமாக அன்வார் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.

WATCH OUR LATEST NEWS