நாயை மோதுவதைத் தவிர்த்த ஆடவர் விபத்தில் சிக்கினார்

செரம்பன் , ஆகஸ்ட் 22-

எதிர்பாராவிதமாக சாலையில் கடந்த நாயை மோதுவதைத் தவிர்க்க முற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததில், அவருக்கு இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட முகமட் ரிட்ஜுவான் ஜைனுடின் வேலையிடத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் நேற்றிரவு 7.55 மணிக்கு, நெகிரி செம்பிலான், தாமன் பந்தர் செனவாங்-கில் அவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆடவருக்கு துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில், அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருக்கும் கைவிடப்பட்ட நாய்களைப் பாதுகாக்க இன்னும் தீவிரமாக செயல்படுமாறு கேட்டு கொண்டார்.

WATCH OUR LATEST NEWS