அலோர் கஜா , ஆகஸ்ட் 22-
10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு தங்க வளையல்களை வாடிக்கையாளர் போல் பாசாங்கு செய்து நகைக் கடையில் இருந்து கொள்ளையடித்து சென்ற பெண்னிற்குப் போலிஸ் வலைவீசியுள்ளது.
தாயிற்குச் சொந்தமான மலாக்கா,பசார் சாலையில் ஆர்கேட் மாரா கட்டடடத்தில் உள்ள அந்த நகைக்கடையை, 28 வயது நபர் நிர்வகித்து கொண்டிருந்த சமயத்தில் நேற்று நண்பகல் 12.45 மணி வாக்கில், சந்தேகத்திற்குரிய அந்த கொள்ளை பெண் அங்கு வந்துள்ளார்.
வாடிக்கையாளர் போல் வந்த அந்த பெண் தங்க வளையலை பார்க்க கேட்டவுடன், பாதிக்கப்பட்ட நபர் எடுத்து கொடுத்துள்ளார்.
அச்சமயத்தில், கடைக்கும் முன் ஓட்டுருடன் நிறுத்தப்பட்டிருந்த Toyota Yaris ரக வாகனத்தில் அப்பெண் தங்க வளையலோடு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தடயவியல் குழுவின் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சந்தேக நபரின் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைஅலோர் கஜா போலிஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஷாரி அபு சாமா உறுதிப்படுத்தியுள்ளார்.