அம்னோ மக்களின் நம்பிக்கை இன்னும் முழுமையாக பெறவில்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டை ஆட்சி செய்த பிறகு 2018-இல், முதல் முறையாக மிகப்பெரிய மலாய் கட்சியான அம்னோ வீழ்ந்ததில் இருந்து, அம்னோ மக்களின் நம்பிக்கையை முழுமையாக இதுவரை பெறவில்லை என்று அம்னோ மகளிர் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அகமது கூறியுள்ளார்.

13-வது தேர்தலில் தேசிய முன்னனிக்கு 122 இடங்கள் இருந்த நிலையில், 15- வது தேர்தலில் அக்கட்சிக்கு 30 இடங்கள் மட்டுமே இருந்ததை சுட்டி காட்டி, அந்த எண்ணிக்கை ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம், மக்களின் நம்பிக்கை அம்னோ இழந்திருக்கும் பிரச்சனையை தீர்வு காண இம்முறை நடத்தப்படும் அம்னோ பொதுக்குழு ஒரு தொடக்க புள்ளியாகம் இருக்கும் என்றும் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அகமது நம்பிக்கை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS