ஷா ஆலம், ஆகஸ்ட் 22-
2022-இல் பிரதமராக தம்மை ஆதரிக்கும் சட்டப்பூர்வ பிரகடனத்தில் கையொப்பமிட்ட 10 தேசிய முன்னனி நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடையாளத்தை வெளியிடுமாறு பேரிக்காதான் நசியனால் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான் ஸ்ரீ முகைதீன் யாசின்-க்கு, அம்னோ உயர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர்முகமது புவாட் சர்காஷி சவால் விடுத்துள்ளார்.
15-வது பொதுதேர்தலில் பிரதமராக தாம் நியமிக்கப்படுவதற்கு 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் முன்னாள் பேரரசர் தம்மை நியமிக்காதது குறித்து முகைதீன் போலிஸிடம் ஆவணங்களை ஒப்படைத்ததாக கூறிய கூற்றுக்கு முகமது புவாட் அவ்வாறு கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அது சார்ந்த ஆவணங்களை முஹிடின் போலிஸிடம் மட்டும் ஒப்படைத்தது மட்டும் போதாது; அந்த ஆவணம் உண்மையானது என்பதை நிரூபிக்க பெரிக்காத்தான நேஷனல் உறுப்பினர்களைத் தவிர மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்படையான வாக்குமூலத்தைப் பெற வேண்டும் என்று இன்று காலை தமது முகநூலு பதிவில்முகமது புவாட் தெரிவித்துள்ளார்.