கொல்கத்தா , ஆகஸ்ட் 22-
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் சம்பவம் குறித்த முழு டைம்லைன் வருமாறு:
ஆகஸ்ட் 9: கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் 31 வயது நிரம்பிய பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் கிடந்தது.
ஆகஸ்ட் 10: வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் மீது உடனடி நடவடிக்கை கோரி இந்திய மருத்துவர்கள் சங்க டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆகஸ்ட் 11: ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுக்கு காரணம் எனக்கூறி அதன் சூப்பிரண்டு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆகஸ்ட் 12: ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பொறுப்பில் இருந்து சந்தீப் கோஷ் மாற்றம் செய்யப்பட்டார். Federation of Resident Doctors Association (FORDA) சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆகஸ்ட் 12: ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பொறுப்பில் இருந்து சந்தீப் கோஷ் மாற்றம் செய்யப்பட்டார். Federation of Resident Doctors Association (FORDA) சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 13: பெண் டாக்டர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து உடனே தண்டனை வழங்க வேண்டும்.நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் நாடு முழுவதும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த வேளையில் பெண் டாக்டர் பலாத்கார கொலை என்பது மிகவும் கொடூரமானது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரை விடுப்பில் செல்ல உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரைணையை சிபிஐ வசம் ஒப்படைத்து அதிரடியாக உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 14: பெண் டாக்டர் பலாத்கார கொலையில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தொடங்கியது.
ஆகஸ்ட் 15: கொல்கத்தா ஆர்ஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு கும்பல் சூறையாடியது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆகஸ்ட் 17 ம் தேதி 24 மணிநேரம் நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 17: நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். பெண் டாக்டர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள், நர்ஸ்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர். பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் அசோகன் கடிதம் எழுதினார். பெண் டாக்டர் பலாத்கார கொலைக்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று தேசிய மகளிர் ஆணையம் குற்றம்சாட்டியது.

ஆகஸ்ட் 20: பெண் டாக்டர் பலாத்கார கொலையை தாமாக முன்வந்து இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பான நிலைமை இல்லாதது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வரும் வியாழக்கிழமைக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.