சுங்கை பெட்டானி ,ஆகஸ்ட் 22-
கெடா, சுங்கை பெட்டானி, சுங்கை லாங் -இல் உள்ள போலிஸ் குடியிருப்பில், 46 வயதான சர்ஜன் பதவியைக் கொண்ட போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த அந்த போலிஸ் அதிகாரி தனியாக வாழ்ந்து வந்தவர்; அதோடு, அவர் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் கோலா மூடா போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் வான் அசாருதீன் வான் இஸ்மாயில் கூறியுள்ளார்.
‘ROLL CALL’ நேரத்தில் சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி வராததை அடுத்து, தேடும்போதுதான் அவர் உயிரிழந்தது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அந்த போலிஸ் அதிகாரியின் உயிரிழப்பில் இதுவரை எந்த ஒரு குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படாத நிலையில், அவரின் மரணத்திற்கான காரணத்தைப் போலிஸ் விசாரித்து வருகிறது.