கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
விஷ வாயுவை கக்கும் ஆபத்து மிகுந்த, பாதாள சாக்கடைகளை இலக்காக கொண்டு, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் நடைப்பாதை குழியில் காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியை தேடும் நடவடிக்கையை மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக சராசரி 100 மீட்டர் இடைவெளியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய்களின் மேற்பரப்பில் காணப்படும் பாதாளக்குழிக்கான 6 கான்கிரேட் இரும்பு சிலாப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் இன்று மதியம் 12 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
மஸ்ஜிட் இந்தியாவின் விஸ்மா யாகின் கட்டடம் முன்புறமுள்ள ஜாலான் மேலாயு,/ ஜாலான் மேலாயு சாலைசந்திப்பு, / மற்றும் லெபு பசார், / ஜாலன் கினாபாலு அருகாமையில் உள்ள டதரன் மெர்டேக்கா, மற்றும் பேங்க் பெர்டானியன் ஆகியப்பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் தூர்வாருவதற்கு பயன்படுத்தப்படும் 6 கான்கிரேட் இரும்பு சிலாப்புகள் திறக்கப்பட்டுள்ளன.
கோாலம்பூரில் பாதாள சாக்கடைகளை பராமரிக்கும் நிறுவனமான Indah Water Konsortium மற்றும் மீட்புக்குழுவினருடன் இன்று காலை 9.30 மணியளவில் கலந்தாலோசிக்கப்பட்டப் பின்னர் 6 பாதாள சாக்கடை குழிகளுக்கான கான்கிரேட் இரும்பு சிலாப்புகள் திறக்கப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் செய்தியாளர்களிடம்தெரிவித்தார்.
Wisma Yakin கட்டடம் முன்புறமுள்ள பகுதியிலிருந்து ஒவ்வொரு இரும்பு சிலாப்பும் திறக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு புறத்திலும் அல்ல, மற்றொரு புறத்தில் ஆந்திரா பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது சுற்றுப்பயணி விஜயலெட்சுமி விழுந்த ஆழ்குழியை, மேலும் தோண்டி தேடுதல் பணிகள் விரிவுப்படுத்தும் பணிகளும் மற்றொரு புறத்தில் நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடைக்குள் மீட்புக்குழுவினர் ஊடுருவியுள்ளனர்.
எனினும் பிற்பகல் 4 மணி வரையில் எந்தவொரு முன்னேற்றம் அல்லது அந்த இந்தியப் பெண் சிக்கியிருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.
இதுவரையில் விஜயலெட்சுமியின் செருப்பு மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது சுற்றுப்பயணி விஜயலெட்சுமி விழுந்த ஆழ்குழியை, மேலும் தோண்டி தேடுதல் பணிகள் விரிவுப்படுத்தும் பணிகளும் மற்றொரு புறத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மீட்பு நடவடிக்கை காரணமாக மஸ்ஜிட் இந்தியாவில் குறைந்தது பத்துக் கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளன.