மஸ்ஜிட் இந்தியா இன்னமும் பாதுகாப்பான பகுதியே

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகப்பகுதியின் நடைப்பாதை, இடிந்து மாது குழியில் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த முன்னணி வர்த்தகப்பகுதியில் காத்திருக்கும் ஆபத்துகள் குறித்த மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனினும் மஸ்ஜிட் இந்தியா சுற்றுவட்டாரப்பகுதி இன்னமும் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்துள்ளார்.

மஸ்ஜிட் இந்தியா வர்த்தகத் தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் இன்னமும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, மண்ணின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் அஸ்திவாரப்பணிகளுக்கு அடித்தளமிட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நடமாட்டத்திற்கு மஸ்ஜிட் இந்தியா பாதுகாப்பான பகுதியாகவே விளங்குகிறது என்றுஏசிபி சுலிஸ்மே தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS