பெலாபுஹான் கிளாங் , ஆகஸ்ட் 27-
அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிக்கு டிஏபி உதவும் என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார்.
நேற்று இரவு நடைபெற்ற டிஏபி-யின் மத்திய செயலவைக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலின் வெற்றியை உறுதி செய்வதற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவுவதற்கு டிஏபி சார்பில் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஷு க்கி, இடைத் தேர்தல் ஒருங்கிணைப்பாளராக கட்சி நியமனம் செய்துள்ளது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.