விஜயலெட்சுமியை கண்டு பிடிப்பதற்கு / அணுசக்தி RADAR சாதனம் இறக்கப்பட்டது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் நடைப்பாதை பாதாளக்குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலெட்சுமியை கண்டு பிடிப்பதற்கு அணுசக்தி Radar சாதனம் இன்று இறக்கப்பட்டது.

மலேசிய அணுவாயுத ஏஜென்சிக்கு சொந்தமான அந்த அதிநவீன ராடர் சாதனம், இந்திய சுற்றுப்பயணியை கண்டு பிடிப்பதில் கடந்த ஐந்து நாட்களாக நிலவி வரும் சிக்கலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற புதிய நம்பிக்கை மீட்புப்பணியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு ராடர் சாதனம், தேடுதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தக்கூடியதாகும். தரையில் ஊடுருவக்கூடிய இந்த ராடர் சாதனம், பாதாள சாக்கடைக்குள் அடைந்துக்கொண்டுள்ள பொருளை மேற்பரப்பிலிருந்து துல்லியமாக கணினி திரையில் காட்டக்கூடியது என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்பு, மஸ்ஜிட் இந்தியாவில் Wisma Yakin கட்டடத்தின் முன் உள்ள பாதாள சாக்கடைகளுக்கு பயன்படுத்தப்பட்ட JETTING முறை, ஆக்கப்பூர்வமான பலனை அளிக்கவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மலேசிய அணுசக்தி ஏஜென்சியிடமிருந்து அந்த சிறப்பு ராடர் சாதனம் இறக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டை முடுக்கி விடுவதற்கு அந்த ஏஜென்சியின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்த அணுசக்தி ராடர் சாதனத்தை தேடுதல் நடவடிக்கைக்கு பயன்படுத்துவது மூலம் காணாமல் போன விஜயலெட்சுமி நிலை குறித்து இரண்டொரு நாளில் விடை காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS