அந்த வாய் தகராறு, தீர்க்கப்பட்டு விட்டது

புக்கிட் மெர்தஜாம் , ஆகஸ்ட் 27-

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், புக்கிட் தெங்கா, கம்போங் ஜூரு- வில் காரோட்டி ஒருவருக்கும், தொழிற்சாலை பேருந்து ஓட்டுநருக்கும் இடையில் நிகழ்ந்த வாய் தகராறு தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரானது என்ற போதிலும் இந்த தகராற்றை இரு தரப்பினரும் தீர்த்துக்கொண்டு விட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளங்களிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாக செபராங் பெரை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

தொழிற்சாலை பேருந்து வழித்தடத்தில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தொடர்பில் பேருந்து ஓட்டுநர் இடைவிடாமல் ஹோர்ன் சத்தத்தை எழுப்பியது, இந்த தகராற்றுக்கு மூலக் காரணமாகும் என்று அவர் விளக்கினார்.

எனினும் காரோட்டியும், பேருந்து ஓட்டுநரும் தங்களுக்கு இடையிலான தகராற்றை நல்ல முறையில் தீர்த்துக்கொண்டுள்ளனர் ஏசிபி ஹெல்மி அரிஸ் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS